Skip to main content

சண்டையிட முன் சிந்தியுங்கள்

நமக்கெதிரான அவதூறுகள் பரப்பப்படுவது,
நமது எதிர்வினையை எதிர்பார்த்து தான்.
நமது எதிர்வினை
▪️நம் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளை மெய்பிக்க உதவ கூடாது.
நமது எதிர்வினை
▪️அவதூறுகளுக்கு வலு சேர்க்க கூடாது.
என்பதில் கவனம் தேவை.

நாம் எங்கே களமாட வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். 
முகலாய மன்னன் Aurangzeb சிறந்த போர் வீரன். அவன் தனது முகலாய பேரரசை விரிவாக்க எல்லைகள் கடந்து போரிட்டான், எல்லா சண்டைகளிலும் கலந்து கொண்டான், இறுதியாக அவன் எல்லையை விரிவாக்க நடத்திய சண்டைகளும், போர்களும், தான் முகலாய பேரரசின் வீழ்ச்சிக்கு ஒரு விதத்தில் காரணமானது.
என்ன தான் போர்களில் அவன் வென்றாலும், அவனால் தன் பேரரசின் நீட்சியை உறுதி செய்ய முடியவில்லை. He lost focus on important things.
அதனால் நாம் எங்கே, எப்போது யாரோடு சண்டையிடுகிறோம் என்பது முக்கியம்.
எங்கள் ஒவ்வொரு சண்டையும், எங்களது வலிமையை அதிகரிக்க உதவ வேண்டும், எங்களது முன்னேற்றத்துக்கு அது வழிவகுக்க வேண்டும்.
எங்களது கவனத்தை எதிரியிடம் சிதறடிக்கும் சண்டைகளை நாம் தவிர்க்க வேண்டும்.
அனுமானின் வாலை கொளுத்தி பயனில்லை, ராமன் கடல கடக்க முன்னமே அவன் தலைக்கு நாம் குறி வைக்க வேண்டும்.
எங்களது நோக்கம் அனுமான்களையும் தூதுவர்களையும் வீழ்த்துவது அல்ல.
ஊடகங்கள் அனுமானின் வேலையை செய்தால்,
நீங்களும் படைகளை அவர்களுக்கு எதிராக குவிக்க கூடாது, அது முட்டாள்த்தனம்.
உங்களது சண்டை அதுவா?
ஊடகங்களை வீழ்த்தவா நீங்கள் வந்தீர்கள்?
நிராயுதபாணியாக வரும் தூதுவர்களின் தலையை வெட்டுவதா வீரம்?
தூதுவனின் சொற்களில் தொனிக்கும் கொட்டத்தை அடக்க வேண்டும் என்றால்,
அவனை ஏவிவிட்டவர்கள் கோட்டையை வீழ்த்த வேண்டும்.
அது தான் வீரர்களுக்கு, தமிழர்களுக்கு அழகு!
அதை நோக்கி செல்லுங்கள்
சண்டைகளை கவனமாக தேர்ந்தெடுங்கள்.

-Mr. பழுவேட்டரையர்.
13/4/21

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

தலைவருக்கு யாரும் மரண செய்தி எழுத வேண்டாம்!

2009 மே 18- சிங்கள அரசு உலகத்துக்கு இரண்டு செய்திகளை சொன்னது.  1) விடுதலை புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி  2) தேசியத் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தி.  அந்த செய்திகளுடன் சிங்களம் போர் வெற்றியை அறிவித்து முடிவுரை எழுதியது. அதனுடன், தலைவரின் மரணத்தை காட்சிப்படுத்தி ஒரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டது. மே 18 தொடர்பாக உலகத்துக்கு சிங்களம் வழங்கிய narrative இது தான்.  இந்த செய்தி ஊடாக இரண்டு விடயங்களை சிங்களம் சாதிக்க துடித்தது.  1) இனப்படுகொலையை மூடி மறைத்தல், 2) போர், விடுதலை புலிகளை நோக்கி மட்டுமே தொடுக்கப்பட்டது என்ற பொய்யை நிறுவுவது.  சிங்களத்தின் இந்த நிகழ்ச்சி நிரலை உலகத்தமிழினம் வெற்றிக்கரமாக முறியடித்து, இன்று உலகெங்கும் ஈழத்தில் நடந்தது, போர் அல்ல , இனப்படுகொலை என்பதை நிறுவி கொண்டிருக்கிறார்கள்.  இது சிங்களத்துக்கு விழுந்த பேரிடி !  தலைவரின் உடலை அலங்கோலமாக காட்டி, அதை வைத்து, அந்த நாளை அவரின் மரண செய்திக்கான நாளாக மாற்ற துடித்தது சிங்களம். அப்படி செய்வதன் ஊடாக, கவனத்தை இனப்படுகொலையில் இருந்து திசைதிருப்பலா...