Skip to main content

நாம் தமிழர் வழியை பின்பற்றுகிறதா திமுக?

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை இதுவரைக்கும்

3500க்கும் மேற்பட்ட தன்னார்வுத் தொண்டர்களுடன்

▪️பல கோடி பனைத்திட்டம்
▪️விதைப் பண்ணை திட்டம்(நாட்டு மர கன்றுகளை உருவாக்கும்/பாதுகாக்கும்)
▪️நீர் நிலை தூர்வாருதல்
▪️நெகிழி ஒழிப்பு திட்டம்

என பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது 
அது
மட்டுமன்றி வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை Sun Pharma எனும் corporateஇன் அபகரிப்பு திட்டத்தில் இருந்து பாதுகாக்க சட்ட நடவடிக்கை எடுத்து வென்ற வரலாறும் நாம் தமிழரின் சுற்றுச்சூழல் பசறைக்கு இருக்கு. 


தேர்தல் நேரத்தில் திடீரென்று நாம் தமிழர் வழியில் திமுக சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது. இன்னொரு பக்கம் பாஜக வேல தூக்கிட்டு யாத்திரை போகுது.

நாம் தமிழர் பல வருடங்களாக பாசறை கட்டி, கட்சியின் உட்கட்டமைப்பில் தனிப் பிரிவுகளை உருவாக்கி, அமைச்சகங்களுக்கு நிகரான பொறுப்புகளையும் கடமைகளையும் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளித்து, நேர்மையாக

▪️சுற்றுச்சூழல் பாசறை,

▪️வீரத்தமிழர் முன்னணி,

போன்ற கட்டமைப்புகள் ஊடாக முன்னெடுத்து வரும் கள பணிகளை,

திமுக பாஜக போன்ற கட்சிகள் இதுவரை செய்ததில்லை.

மாறாக தேர்தல் நேரத்தில் மட்டும் திடீர் திடீர் என்று இத்தகைய கூத்துக்கள் அரங்கேறுகிறது. இதெல்லாம் தேர்தலுக்காக  திமுக பாஜக கட்டும் புது வேஷம், ஆடும் புது கூத்து போல் தான் தெரிகிறது.

மக்களை ஏமாற்ற அரங்கேறும் இத்தகைய கூத்துக்களால் தான் திமுகவின் எந்த so called பாசறையும், பெரிய அளவுக்கு பிரகாசித்ததில்லை. திமுகவில் உதயநிதிக்கு போஸ்டர் ஓட்ட இருக்கும் கும்பல்களுடன் பத்தோடு பதினொன்றாக விரைவில் திமுகவின் இந்த சுற்றுச்சூழல் இயக்கமும் இணைந்து விடும்.

தஞ்சை கோபுரத்தில் தமிழை ஏற்ற நாம் தமிழர் சட்ட போராட்டம் செய்யும் போது வராத இந்துத்துவ காவி,

தைப்பூசத்தை கொண்டாட, அதற்கு விடுமுறை கோர வராத யாத்திரைகள் தேர்தல் நேரத்தில் வருகிறது.

மண் காக்க, வளம் காக்க நடந்த போராட்ட களங்களில் உருவாகாத பாசறைகள், தேர்தல் களத்தில் திடீர் என்று உருவாகுகிறது.

இதையெல்லாம் பார்க்கும் போது வேடிக்கையாக தான் இருக்கிறது.

இந்த தேர்தல் நேர
போலிகளை வீழ்த்தி
சரியானது வென்றே தீரும்!
-Mr. பழுவேட்டரையர் 
23/11/2020

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

தலைவருக்கு யாரும் மரண செய்தி எழுத வேண்டாம்!

2009 மே 18- சிங்கள அரசு உலகத்துக்கு இரண்டு செய்திகளை சொன்னது.  1) விடுதலை புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி  2) தேசியத் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தி.  அந்த செய்திகளுடன் சிங்களம் போர் வெற்றியை அறிவித்து முடிவுரை எழுதியது. அதனுடன், தலைவரின் மரணத்தை காட்சிப்படுத்தி ஒரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டது. மே 18 தொடர்பாக உலகத்துக்கு சிங்களம் வழங்கிய narrative இது தான்.  இந்த செய்தி ஊடாக இரண்டு விடயங்களை சிங்களம் சாதிக்க துடித்தது.  1) இனப்படுகொலையை மூடி மறைத்தல், 2) போர், விடுதலை புலிகளை நோக்கி மட்டுமே தொடுக்கப்பட்டது என்ற பொய்யை நிறுவுவது.  சிங்களத்தின் இந்த நிகழ்ச்சி நிரலை உலகத்தமிழினம் வெற்றிக்கரமாக முறியடித்து, இன்று உலகெங்கும் ஈழத்தில் நடந்தது, போர் அல்ல , இனப்படுகொலை என்பதை நிறுவி கொண்டிருக்கிறார்கள்.  இது சிங்களத்துக்கு விழுந்த பேரிடி !  தலைவரின் உடலை அலங்கோலமாக காட்டி, அதை வைத்து, அந்த நாளை அவரின் மரண செய்திக்கான நாளாக மாற்ற துடித்தது சிங்களம். அப்படி செய்வதன் ஊடாக, கவனத்தை இனப்படுகொலையில் இருந்து திசைதிருப்பலா...