Skip to main content

இந்தியாவின் துரோகம்..

அண்ணன் திலீபன் இந்தியாவிடம் முன்வைத்த 5 கோரிக்கைகளில், தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வந்த

• ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
என்பதும் ஒன்று.

புலிகள் இந்தியாவிடம் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு அகிம்சை வழிக்கு திரும்பிய பின்பு, சிங்கள ராணுவ ஊர்காவல் படைகள் மற்றும் ஒட்டுக்குழுக்கள் ஊடாக புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை சிங்களமும் இந்தியாவும் இங்கும் அங்குமாக அரங்கேற்றி கொண்டிருந்தது.

இந்தியாவின் வாக்குறுதியை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்து  நிராயுதபாணிகளாக நின்ற புலிகளை இந்த ஊர்காவல் படைகளும், ஒட்டுக்குழுக்களும் வேட்டையாட தொடங்கியது.

இதையெல்லாம் எதிர்த்து தான் திலீபன் அகிம்சை வழியில் போராடினார். 'இந்திய அமைதி காக்கும் படை' புலிகளிடம் இருந்து ஆயுதங்களை பெற்றுக்கொண்டதை போல், மற்ற குழுக்களிடம் இருந்தும் ஆயுதங்களை பறித்திருக்க வேண்டும் தானே?

அது தானே முறையான ஒரு "அமைதி காக்கும்" நடவடிக்கையாக இருந்திருக்கும்? அதை தானே திலீபனும் புலிகளும் விரும்பினார்கள்? அப்ப அதை செய்ய ராஜீவ் தயங்கியது ஏன்? இங்கே இந்தியாவின் உண்மையான நோக்கம் அமைதி காப்பதா?  இல்லை, புலிகளை அழிப்பதா?

புலிகளுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து, அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறித்த ராஜீவ் படை, அந்த ஆயுதங்களை தங்களின் ஒட்டுக்குழுக்களுக்கு வழங்கி புலிகளை வேட்டையாட சொல்லி உத்தரவிட்டது.

இந்தியா துரோகம் செய்தது, புலிகளை முதுகில் குத்தியது. ஆனால் அதற்கும் புலிகளின் உடனடி மறுபதில் அகிம்சை வழி போராட்டமாக தான் இருந்தது. அங்கேயும் இந்தியாவை புலிகள் எதிர்க்க விரும்பவில்லை, ஆனால் இந்தியா திலீபனின் அகிம்சையை தோற்கடித்தது.

"திலீபன் என்ன பெரிய காந்தியா"? என்று சொல்லி அவரது போராட்டத்தை கொச்சைப்படுத்தியது ராஜீவின் வானரம் டிக்சிட்.

தமிழர் தேசத்தில் புலிகளுக்கு இருந்த monopoly on violence, (வன்முறையின் முற்றுரிமை)யை உடைக்கவே இந்தியா புலிகளை நம்ப வைத்து கழுத்தறுக்க துணிந்தது.

புலிகளின் தலைமையின் கீழ் ஈழ விடுதலைக்கான ஒட்டு மொத்த ராணுவமும் அணிவகுத்து நின்றால், சிங்கள State இயங்க தேவையான monopoly on violence தொடர்ந்து சவால்களை சந்தித்து கொண்டே இருக்கும் என்று அஞ்சி, ஈழ விடுதலை போராட்டத்தை நசுக்கும் நோக்குடன் புலிகளுக்கு எதிரான ஒரு யுத்தத்தை ஒட்டுக்குழுக்கள் ஊடாக இந்தியம் அரங்கேற்றியது.

திலீபன் இந்தியத்திடம் இல்லாத மனிதம், இருப்பதாக நம்பி பசியுடன் போராடினான். இந்தியா அவன் உயிரை பறித்து, தனது மனிதமற்றத்தன்மையை மீண்டும் நிரூபித்தது.

இந்திய அமைதி காக்கும் படையின் உண்மையான நோக்கம் அமைதி காப்பதாக இருந்திருந்தால், திலீபன் மரணத்தை தழுவியிருக்க மாட்டார். 
-Mr. பழுவேட்டரையர்

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

தலைவருக்கு யாரும் மரண செய்தி எழுத வேண்டாம்!

2009 மே 18- சிங்கள அரசு உலகத்துக்கு இரண்டு செய்திகளை சொன்னது.  1) விடுதலை புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி  2) தேசியத் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தி.  அந்த செய்திகளுடன் சிங்களம் போர் வெற்றியை அறிவித்து முடிவுரை எழுதியது. அதனுடன், தலைவரின் மரணத்தை காட்சிப்படுத்தி ஒரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டது. மே 18 தொடர்பாக உலகத்துக்கு சிங்களம் வழங்கிய narrative இது தான்.  இந்த செய்தி ஊடாக இரண்டு விடயங்களை சிங்களம் சாதிக்க துடித்தது.  1) இனப்படுகொலையை மூடி மறைத்தல், 2) போர், விடுதலை புலிகளை நோக்கி மட்டுமே தொடுக்கப்பட்டது என்ற பொய்யை நிறுவுவது.  சிங்களத்தின் இந்த நிகழ்ச்சி நிரலை உலகத்தமிழினம் வெற்றிக்கரமாக முறியடித்து, இன்று உலகெங்கும் ஈழத்தில் நடந்தது, போர் அல்ல , இனப்படுகொலை என்பதை நிறுவி கொண்டிருக்கிறார்கள்.  இது சிங்களத்துக்கு விழுந்த பேரிடி !  தலைவரின் உடலை அலங்கோலமாக காட்டி, அதை வைத்து, அந்த நாளை அவரின் மரண செய்திக்கான நாளாக மாற்ற துடித்தது சிங்களம். அப்படி செய்வதன் ஊடாக, கவனத்தை இனப்படுகொலையில் இருந்து திசைதிருப்பலா...