Skip to main content

தொடர்ந்து ஒலிக்கும் திலீபனின் குரல்

தியாக தீபம் அண்ணன் திலீபன் 5 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்தார். அந்த 5 கோரிக்கைகளில், PTA எனும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதான அரசியல் கைதிகளின் விடுதலையும் ஒன்று. இன்று வரை இந்த கோரிக்கை தமிழர் தேசத்தில் ஒலித்து கொண்டே தான் இருக்கிறது.

பயங்கரவாத தடை சட்டம்(PTA) என்பது ஆயுத போராட்டத்தை முடக்குகிறோம் என்ற பெயரில், போராட்டத்தின் அரசியல் வெளியை முடக்க பயன்படுத்தப்பட்ட ஒரு ஒடுக்குமுறை கருவி. இந்த தடை சட்டத்தின் கீழ் ஒரு சாதாரண போராட்ட முழக்கம் அடங்கிய சுவரொட்டி ஒட்டுவது கூட ஒரு குற்றமாக கருதப்படலாம், அதன் அடிப்படையில் ஒருவரை 20 வருடங்கள் சிறையில் அடைக்கலாம், எந்த காரணமும் சொல்லாமல் ஒரு தனி நபரை கைது செய்யலாம், தடுத்து வைக்கலாம், அவரது உடமைகளை பறிக்கலாம்.. இப்படி ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளை எல்லாம் பறிக்கும் சட்டமாகவே இந்த பயங்கரவாத தடை சட்டம் இருக்கிறது.

வெறுமனே தனி மனித இயக்கத்தை மட்டுமே இந்த சட்டம் முடக்கவில்லை. தமிழர்களின் நிலங்களை அபகரிக்கவும் இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கு.

80களில் PTA, PSO ஊடாக நாலு வகையான zonesகளாக;
▪️Prohibited zones 
▪️Surveillance zones
(கடலோர பிரதேசங்களை அபகரிக்க/கட்டுப்படுத்த)

▪️Security zones 
▪️High security zones
(நிலங்களை அபகரிக்க)

தமிழர் நிலத்தை சிங்கள அரசு பிரித்து,
தமிழர் நிலங்களை சட்டரீதியாக அபகரிக்கும் வேலையை ஆரம்பித்தது.
இதனால் பல மக்கள் தங்கள் சொந்த நிலங்களை விட்டு இடம்பெயர வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

Public Security ordinance(PSO)எனும் சட்டத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட சட்டம் தான் இந்த Prevention of Terrorism Act(PTA)எனும் பயங்கரவாத தடை சட்டம்.

இந்த சட்டம் 1978ஆம் ஆண்டு "தற்காலிகமாக" கொண்டு வரப்பட்டு, பின் 1982இல் நிரந்தரமாக்கப்பட்டது. இந்த சட்டத்தின் ஊடாக இயல்பாக்கப்பட்ட சிங்கள அரசின் வன்முறை கலாச்சாரம் தான் "காணாமல் ஆக்கப்பட்டோர்" என்ற ஒரு மக்கள் கூட்டம் உருவாக காரணமாக இருந்தது.

போராட்டத்தின் சனநாயக வெளியை(Democratic space of the struggle) உடைக்க உருவாக்கப்பட்ட இனப்படுகொலை கருவியான இந்த பயங்கரவாத தடை சட்டம் கொண்டு வரப்பட்ட போது, அன்றைய அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் இந்த சட்டத்தை எதிர்க்க முன் வரவில்லை. சிங்களம் இது "தற்காலிகமான" ஒரு சட்டம் என்று சொன்ன வாக்குறுதியை நம்பி அமைதி காத்தார் சனநாயகவாதி அமிர்தலிங்கம்.  தமிழர்களின் சனநாயக உரிமையை மறுக்க உருவாக்கப்பட்ட ஒரு சட்டத்தை எதிர்க்க கூட அன்றைய சனநாயக தலைமைகளிடம் தைரியம், தொலை நோக்கு பார்வை இருக்கவில்லை.. 


ஆனால் ஆயுதம் ஏந்திய புலிகளுக்கு அந்த பார்வை இருந்தது. புலிகள் ஆயுதங்களை இந்திய "அமைதி காக்கும்" படையின் கையில் ஒப்படைத்த பிறகு, முன்னெடுத்த அகிம்சை வழி போராட்டத்தின் முதன்மை கோரிக்கையாக இருந்தது "பயங்கரவாத தடை சட்டத்தில்" இருந்தான விடுதலை சம்பந்தப்பட்ட கோரிக்கை தான்.

திலீபனின் அந்த கோரிக்கையை வலியுறுத்தி, வழி மொழிய இந்தியா தங்கியது ஏன்? 

தமிழர்கள் அகிம்சை வழியில் தான் போராட வேண்டும் என்று இந்தியா உண்மையிலேயே விரும்பியிருந்தால், அதற்கான சனநாயக வெளியை உருவாக்கும் வேலையை செய்ய முன்வந்த புலிகளை இந்தியா ஊக்குவித்திருக்க வேண்டும் தானே?

இந்தியா ஏன் அதை செய்யவில்லை? அன்று திலீபன் முன்னிறுத்திய அதே கோரிக்கை, இன்று வரை உயிர்ப்புடன் இருக்கிறது. ஆயுத போராட்டம் மௌனித்த பிறகும், இனப்படுகொலை கருவியான பயங்கரவாத தடை சட்டம் இன்னும் இயங்கி கொண்டு தான் இருக்கிறது.

உலக நாடுகளும், ஐநாவும் கூட

"Sri lanka should review the Public Security Ordinance Act and repeal the Prevention of Terrorism Act, and replace it with anti-terrorism legislation in accordance with contemporary international best practices"(Resolution 30/1)

இந்த கோரிக்கையை வலியுறுத்தியிருக்கு.

தமிழர் தேசம் தொடர்ந்து அண்ணன் திலீபன் வழியில் இந்த தடை சட்டத்தில் இருந்தான சனநாயக விடுதலையை கோரிக்கையை, அதற்கான போராட்டத்தை முன்னிறுத்தி களமாடி கொண்டே தான் இருக்கும்.

அண்ணன் திலீபனின் நினைவை போற்றும் போது, அந்த பேரான்மா முன்நிறுத்திய கோரிக்கைகளின் நியாயங்கள் மீண்டும் மீண்டும் மேடையேறுகிறது. அந்த உன்னத போராளியின் மென்மையான குரல், கூரிய வாளாகி அகிம்சை வேடம் அணிந்து நாடகமாடும் சனநாயக போலிகளின் முகத்திரைகளை கிழிக்கிறது..

அதனால் தான் அவரின் நினைவை போற்ற இத்தனை தடை. குற்றம் செய்தவன் சத்தியத்தின் ஒளியை கண்டு பதறுவது இயல்பு தானே! 

தடைகளை மீறியும் உரிமை குரல்கள் ஒலிக்கும்,
சத்திய ஒளி ஒடுக்குமுறையின் இருளை கிழிக்கும்.
-Mr.பழுவேட்டரையர்


Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...