Skip to main content

ராஜீவின் Child Soldiers

ஈழ விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட பல இயக்கங்கள் வீழ்ச்சியடைய இந்திய உளவுத்துறையின் தலையீடே முக்கிய காரணமாக இருந்தது. TELO, EPRLF போன்ற இயக்கங்கள் இந்தியாவுக்கு சேவகம் செய்வதையே தங்கள் முதன்மை கடமையாக கொண்டிருந்தார்கள்.

இந்தியாவுக்கு அவர்கள் சேவகம் செய்த விதம் பற்றி எல்லாம், இன்னொரு பதிவில் பார்ப்போம்.

PLOTE, TELO, EPRLF போன்ற இயக்கங்கள் வலுவடைந்திருந்த நிலையில், இந்திய அமைதி காக்கும் படை, அந்த மூன்று இயக்கங்களில் மிஞ்சிய எச்ச சொச்சங்களை வைத்து ENDLF என்ற ஒரு ஒட்டுக்குழுவை உருவாக்கியது.

ராஜீவ் படையின் இந்த ஒட்டுக்குழு தான் ஈழத்தில் சிறுவர்கள் கைகளில் ஆயுதங்களை திணித்த முதல் குழு.
ராஜீவின் உத்தரவின் பெயரில், இந்திய அமைதி காக்கும் படையின் ஆசீர்வாதத்தில், EPRLF பத்மநாபா கூட்டம் எனும் அடியாட்கள் ஊடாக தான் ஈழத்தில் முதல் முறையாக பாடசாலை மாணவர்கள் வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள்.

இந்திய ராணுவம் ஈழத்தில் தங்களின் ஒட்டுக்குழுக்களை கொண்டு, தங்கள் உத்தரவை நிறைவேற்ற, இந்தியாவின் proxyயாக, ஒரு புது ராணுவத்தை உருவாக்க ஆரம்பித்தார்கள். தமிழ் தேச ராணுவம் என்று பெயர் சூட்டப்பட்ட அந்த so called ராணுவத்தை, ஈழத்தின் தனிப்பெரும் ஆயுத குழுவாக மாற்றி, அதன் ஊடாக டெல்லியின் ராணுவ நடவடிக்கைகளை ஈழத்தில் நடைமுறைப்படுத்த திட்டம் தீட்டப்பட்டது.


அதன் அடிப்படையில் அந்த ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் வேலை ஆரம்பித்தது.

இந்திய அமைதி காக்கும் படை, மற்றும் அதனுடன் பயணித்த ஒட்டுக்குழுக்களுக்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் எந்த ஒரு மதிப்பும் இருந்ததில்லை. அதற்கு காரணம் IPKF, EPRLFஇன் ஒழுக்கமற்ற, மனிதமற்ற நடவடிக்கைகள் தான். 

அதனால் மக்கள் யாரும் ராஜீவின் இந்த புது ராணுவத்தில் இணையவில்லை. அதனால் வலுக்கட்டாயமாக ஆள் சேர்க்கும் வேலையை ENDLF ஆரம்பித்தது. பாடலசாலைகள், Tutorialகளுக்கு வெளியே ENDLF வல்லூறுகள் போய் நின்று, அங்கு அருட்செல்வம் தேடி வரும் பிஞ்சுகளை, சிறுவர்களை, மாணவர்களை கடத்தி சென்று, அவர்களை ராணுவத்தில் இணைக்கும் வேலையை ஆரம்பித்தது.

தனியார் Busகளிலும், Vanகளிலும் சிறுவர்களை கடத்தும் வேலையை ஆரம்பித்தது ENDLF. அப்படி கடத்தப்படும் சிறுவர்கள், இந்திய முகாம்களுக்கு அருகில் உள்ள வீடுகளில்(தற்காலிக ENDLF முகாம்களில்) அடைக்கப்பட்டார்கள்.

அந்த வீடுகளில் அந்த சிறுவர்களுக்கு Cigarette, சாராயம் என்று போதை பொருட்கள் தாராளமாக வழங்கப்பட்டது, அவர்களை போதைக்கு "சுக வாழ்வுக்கு" அடிமைப்படுத்தும் வேலை ஒரு பக்கம் நடந்தது.

அடம்படித்த சிறுவர்கள் கொடூரமாக, மற்ற சிறுவர்கள் முன் தாக்கப்பட்டார்கள். அந்த சித்திரவதைகளை பார்த்து, அந்த பயத்திலேயே பல சிறுவர்கள், மாணவர்கள் அந்த காடையர்கள் சொன்னபடியே செயல்பட ஆரம்பித்தார்கள்.

தொடர்ந்து ஒத்துழைக்க மறுத்த இளைஞர்கள், இருட்டறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்கள். நாலு நாட்கள் இப்படி இந்திய அமைதி காக்கும் படையின் முகாம்களுக்கு அருகில் உள்ள வீடுகளில் வைத்து துன்புறுத்தப்படும் அந்த சிறுவர்கள், 4ஆம் நாள் வேறொரு இடத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

அழைத்து செல்ல முன், அந்த சிறுவர்களுக்கு மொட்டை அடித்து, அவர்களின் கண்களை கட்டி தான் அவர்களை வாகனங்களில் ஏற்றுவார்கள். அந்த வீடுகளுக்கும், இந்திய முகாம்களுக்கும் வெளியே கடத்தப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரும், உறவுகளும் கதறி கதறி அழும் சத்தம் எப்போதும் ஒலித்தப்படி இருந்தது.

அந்த ஓலத்தின் நடுவே தமிழர் தேசம், அடங்கி, ஒடுங்கி, டெல்லி கோர வல்லாதிக்கத்தின் இந்த ஆட்டத்தை அடக்க முடியாது, அடங்கா கோபத்தில் எரிந்து கொண்டிருந்தது. ஒரு பக்கம் ஒப்பந்தம் என்ற பெயரில் எங்கள் வீர மறவர்களின் கையில் இருந்து ஆயுதங்களை பறித்த ராஜீவ் காந்தி,  இன்னொரு பக்கம் ENDLF ஊடாக பாடசாலைக்கு சென்ற எங்கள் தமிழ் பிஞ்சுகளின் கைகளில் ஆயுதங்களை திணித்து ரசித்தார்.

காலப்போக்கில், ENDLF ஊடாக ராஜீவ் போட்ட திட்டங்களையும் விடுதலை புலிகள் முறியடித்து வென்றார்கள். பல பெற்றோரின் கோபத்தை தணித்தது அந்த முறியடிப்பு, 

உரிமை மறுக்கப்பட்ட எங்கள் தேசத்துக்கு, 

அநீதி இயல்பாக்கப் பட்டுக்கொண்டிருந்த  ஒரு கொடுஞ்சூழலில், எங்கள் மக்களுக்கான நீதியை வென்றெடுத்த விடுதலை புலிகள், மக்களின் பார்வையில் சட்டம், நீதி, இவை அனைத்தையும் வழி நடத்தும் தமிழர் அறத்தின் தனிப்பெரும் அடையாளமாக மாறினார்கள்.

தொடரும்..

Mr. பழுவேட்டரையர் 
8/3/2022

Comments

Post a Comment